வியாழன், 21 நவம்பர், 2013

கருப்பட்டியின் பயன்கள்:


பனங்கட்டி அல்லது கருப்பட்டி.

கருப்பட்டியின் பயன்கள்: பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். 

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

 ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

 குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். 

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. 

காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். 

சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

 சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். 

கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.

அல்சர் அவதியா..? சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

அல்சர் அவதியா..? சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!


Stomach ulcer symptoms




இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.
இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.
காரணங்கள்: அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.
ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.
சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.
கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.
மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.
பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.
சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.
சேர்க்க வேண்டியவை:
கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.
தவிர்க்க வேண்டியவை:
அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.
கடைப்பிடிக்க வேண்டியவை:
காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.
பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.
தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

புதன், 20 நவம்பர், 2013

மூட்டு வலிக்கு இயற்கை வைத்தியம்:-



மூட்டு வலிக்கு இயற்கை வைத்தியம்:- 1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய 

வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் 

அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது 

மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். 2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் 

இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 3. இரண்டு 

தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் 

பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது 

கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது 

மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும். 5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) 

விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை 

அருந்தலாம். 6. இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சு 

சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய 

வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட 

வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் 

காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க 

வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது. 7. ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை அல்லது 

பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட 

வேண்டும்

ஒவொருவரும்  மருத்துவரின் ஆலோசனை பெற்று முயற்சி செய்யவும்.
இந்த தகவல் வலைதளத்தில் இருந்து பெற்றது. பதிவிட்டவருக்கு நன்றிகள்.

மாரடைப்புக்கான காரணம்

##~##
''நேத்துதான் நல்லாப் பேசிட்டு இருந்தார்... அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே...'' - நெருக்கமான நண்பர்கள் இப்படி வருத்தப்படுவதும், ''ஏற்கெனவே ரெண்டு அட்டாக் வந்திருக்கு. அதைக் கவனிக்காம விட்டிருக்கார். அதான், இப்படியாகிடிச்சு!'' என உறவுக்காரர்கள் விளக்கம் சொல்வதையும் பல இடங்களில் காதுபடக் கேட்டு இருக்கிறோம். திடீர் மரணங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்புதான். நமது நாட்டில் 25 முதல் 69 வயதினருக்கு இடையே ஏற்படும் மரணங்களில் 25 சதவிகிதம் மாரடைப்பால்தான் நிகழ்கின்றன. இதய நோய் வராமல் தடுக்கவும், வந்துவிட்ட நோயில் இருந்து நம்மை நாமே மீட்டெடுக்கவும் பிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும் கார்டியோ தொராசிக் நிபுணருமான டாக்டர் கே.எம்.செரியன் சொல்லும் வழிகள் இதோ...
 மாரடைப்புக்கான காரணம்
உடல் முழுவதும் ரத்தம் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய்வது நம் இதயம். 'லப் டப்’ தாள லயத்தோடு இதயம் துடித்து இயங்குவதால்தான், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் இதயம் இயங்கவும் ரத்தம் தேவை. இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்துபோவதாலோ அடைப்பு ஏற்படலாம். இதனால், இதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.
மாரடைப்பைத் தவிர்க்க முடியும்!
1உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, புகை பிடித்தல், உணவில் அதிகக் கொழுப்பு, உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம், மரபுரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல்.... என கொரனரி (இதய ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும்) மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. உங்கள் மருத்துவரை அணுகி உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை - கொழுப்பு அளவினைத் தொடர்ந்து பரிசோதனை செய்து, தேவைக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சை பெற்றாலே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
2குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொண்டால், மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும். ரத்த அழுத்தம் சராசரிக்கும் அதிகமாக இருந்தால், இந்தப் பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வது நல்லது. சராசரி ரத்த அழுத்தம் என்பது (ஐடியல் பிளட் பிரஷர்) 130/80 எம்.எம்.எச்.ஜி-க்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
3கொரனரி இதய நோய் வருவதற்கு சர்க்கரை நோய் ஒரு மிக முக்கியக் காரணம். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை கட்டாயம் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
4உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், உடனடியாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
5குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும். மாரடைப்புக்கான காரணிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் கொழுப்புப் பரிசோதனையை டாக்டரின் ஆலோசனைப்படி அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.
உணவுப் பழக்கம்
6மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்க, இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்கும்.
7குறைந்த கொழுப்பு மற்றும் அதிக அளவில் புரதச் சத்து நிறைந்த பீன்ஸ், மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்கிறது. அசைவம் சாப்பிடுபவர்கள், 'ரெட் மீட்’ என்று சொல்லக் கூடிய ஆடு - மாடு போன்றவற்றின் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் அதிக அளவு கொழுப்பு உள்ளது.
8தோல் நீக்கிய கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவை ஆரோக்கியமானவை. ஆனாலும், அதிக அளவில் எண்ணெய்விட்டுப் பொரித்துச் சாப்பிடுவது தவறு.  முட்டையின் வெள்ளைப் பகுதியில் அதிகப் புரதச் சத்து உள்ளது. ஆனால், அதன் மஞ்சள் கரு அதிகக் கொழுப்பு மிக்கது. எனவே, முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்ப்பது மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கும்.
9பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதில் அதிக அளவில் உப்பு உள்ளது. அது உயர்ரத்த அழுத்தத்தைத் தூண்டி விடும்.
10அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டிவிடும். இதனால், அதிகப்படியாக உடல் எடையும் கூடும்.
11'ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட்’ மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. மேலும், இது உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். ஆளி விதை (Flax seed) எண்ணெய், வால்நெட் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் இந்த ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட் உள்ளது. சால்மன் போன்ற சில மீன் வகைகளிலும் இந்த ஒமேகா - 3-ஃபேட்டி ஆசிட் நிறைந்து உள்ளது.
12சேச்சுரேட்டட் கொழுப்பு (Saturated fat) மற்றும் டிரான்ஸ் கொழுப்பு (Trans fat) ஆகியவை (ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பதன் மூலம்) கொரனரி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். அதனால், இவற்றையும் தவிர்க்க வேண்டும்.  
13இறைச்சி, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய் ஆகியவற்றில் சேச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. பொரிக்கப்பட்ட துரித உணவுகள், பேக்கரி பொருட்கள், அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளில் அதிக அளவில் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
14அதிக அளவில் மது அருந்துவது உடல்பருமனுக்கு வழிவகுக்கிறது. மேலும், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. எனவே, மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி
15ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர் உடற்பயிற்சிகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன. உங்களுக்குரிய ஆரோக்கியமான எடையை சரிவரப் பராமரியுங்கள். இதய நோய்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம்; மன அழுத்தத்தைக் குறைக்கவும் உடற்பயிற்சி உதவும்.
16தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, நடப்பதும் கூட நல்ல உடற்பயிற்சிதான். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்க வேண்டும் என்று இல்லை. யோகா மற்றும் தியானப் பயிற்சி போன்றவை மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மாரடைப்பு அபாயமும் குறையும்.
ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல்
17உங்கள் உடல் எடை ஆரோக்கியமானதுதானா என்பதை பாடி மாஸ் இன்டெக்ஸ் மூலம் கணக்கிடலாம். பி.எம்.ஐ. புள்ளிகள் 25 அல்லது அதற்கு மேல் இருந்தால், உஷாராகிவிட வேண்டும்.
18இடுப்பு அளவைக் கணக்கிடுவதால், வயிற்றுப் பகுதியில் எவ்வளவு கொழுப்பு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆண்களுக்கு சராசரி இடுப்பு அளவு என்பது 40 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு 35 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.  
19பெரியவர்களுக்கு உடல் எடை கூடுகிறது என்றால், அது பெரும்பாலும் தசை எடை கூடுதலாக இருக்காது, கொழுப்பு அதிகரிப்பாகத்தான் இருக்கும். அதிக அளவிலான உடல் எடை என்பது உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுப்பதுடன் மாரடைப்புக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.
20குறைந்த அளவிலான உடல் எடைக் குறைப்புகூட மிகப் பெரிய பலனை அளிக்கும். உங்கள் எடையை வெறும் 10 சதவீதம் குறையுங்கள், அது உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், ரத்தத்தில் கொழுப்பு அளவையும் குறைத்து, சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
புகை பிடிக்காதீர்கள்
21புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துங்கள். மாரடைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்பது புகையிலைப் பழக்கம். சிகரெட் புகையில் உள்ள நிகோடின் என்ற நச்சு ரத்தக் குழாயினை சுருக்கி, இதயத் துடிப்பு எண்ணிக்கை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் ஆக்சிஜனுக்கு மாற்றாகப் போய் உட்கார்ந்து கொள்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான போதுமான ஆக்சிஜன் கிடைப்பதற்காக (அதிகம் ரத்தம் செலுத்தும்படி) இதயம் கூடுதலாக வேலை செய்யவேண்டி இருக்கிறது. நீங்கள் புகைப்பதை நிறுத்தினால் அடுத்த ஓர் ஆண்டுக்குள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இதய நோய்க்கான வாய்ப்புகளும் குறைந்துவிடும். புகைப்பழக்கம் இல்லாத, ஆனால் ஒருவர் புகைத்துவிட்ட காற்றை சுவாசிப்பவருக்கும் கூட பாதிப்பு ஏற்படும். நீங்கள் புகைப்பதால், புகைப்பழக்கமே இல்லாத உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரும்கூட பாதிப்புக்கு ஆளாகின்றனர்.  
மருந்து-மாத்திரைகள்
22உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிகக் கொழுப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், டாக்டர்கள் பரிந்துரைத்திருக்கும் மருந்து-மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களின் இதய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு பைபாஸ் அறுவைச் சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டும் என்று டாக்டர் பரிந்துரைத்தால், உடனடியாக அதைச் செய்து கொள்ளுங்கள். பயம் காரணமாகத் தள்ளிப் போடாதீர்கள்.
23மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். மருத்துவமனைக்குச் செல்லும் முன் ஆஸ்பிரின் மாத்திரையைப் பயன்படுத்துங்கள். அது இதயத் தசைப் பாதிப்பைக் குறைக்கும்.
24தொடர் மருத்துவப் பரிசோதனை, ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழ்நிலை, மாரடைப்புக்கான காரணிகளைக் கட்டுப்படுத்துவது போன்றவை நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.
பரிசோதனைகள்
25எளிய ஈ.சி.ஜி. பரிசோதனை மூலம் வலி இன்றி ஒருவரின் இதய மின் செயல்பாட்டைக் கண்டறிய முடியும். இது இதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கிறது என்பதைக் காட்டும். இதயம் எந்தளவு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு உரிய சிகிச்சை அளித்தால், மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும்.
உடலில் எங்கு கொழுப்பு அதிகமாக உள்ளது என்பதைக் கண்டறிவது இப்போது எளிமை. சாதாரண சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாலே, கொழுப்பு தோலுக்கு அடியில் உள்ளதா அல்லது வயிற்றுப் பகுதிகளில் உள்ளதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியும். இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் எவ்வளவு கொழுப்பு உள்ளது? எத்தனை ஆண்டுகளாக உள்ளது என்பதை 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும். எதிர்காலத்தில் ஒருவருக்குக் கொழுப்பு அடைப்பு ஏற்படுமா என்பதையும் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். ரத்தக் குழாயில் 0.5 மி.மீ. அளவுக்குக் கொழுப்பு படிந்திருந்தால் கூட, இந்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும்.

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். 

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

 விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை உட்கொள்ளவும்.
ஒவொருவரும்  மருத்துவரின் ஆலோசனை பெற்று முயற்சி செய்யவும்.
இந்த தகவல் வலைதளத்தில் இருந்து பெற்றது. பதிவிட்டவருக்கு நன்றிகள்.

இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?

இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா? ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா? நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து கவனியுங்கள். 

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்! தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

 ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார். மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார். நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார். ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார். இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

 இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
 1 கப் எலுமிச்சை சாறு 
1 கப் இஞ்சிச் சாறு 
1 கப் புண்டு சாறு 
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர். 
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள். மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும். நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். 
- ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்

பித்தம் அதிகம் உள்ளவர்கள் பித்தத்தை குறைக்கும் மூலிகையையும் இத்துடன் சேர்ப்பது சிறந்த்தது. ஏனெனில் இது பித்த தேகம் உள்ளவர்களுக்கு பித்தத்தை மேலும் அதிகபடுத்தும்.

ஒவொருவரும்  மருத்துவரின் ஆலோசனை பெற்று முயற்சி செய்யவும்.
இந்த தகவல் வலைதளத்தில் இருந்து பெற்றது. பதிவிட்டவருக்கு நன்றிகள்.

Allergy - அலர்ஜி (ஒவ்வாமை)




Allergy - அலர்ஜி (ஒவ்வாமை) *************************** 

அலர்ஜி என்பது நோய் அல்ல. பாக்டீரியா, வைரஸ், தட்பவெப்பம், உணவு, சுற்றுச்சூழல், மாசு, வாசனை 

திரவியங்கள், பூக்களின் மகரந்தம், உடலின் எதிர்ப்பு சக்தி குறைபாடு, செல்லப் பிராணிகளின் தோலில் 

உள்ள ஒரு பொருள், முடி என் பல காரணங்களினால் உடலில் ஏற்படும் ஒவ்வாமையே அலர்ஜி ஆகும். 

மேலை நாடுகளில் மட்டுமே அலர்ஜியின் தாக்கம் அதிகம் எனும் நிலை மாறி இப்போது நம் நாட்டிலும் 

இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அலர்ஜி எந்த வயதிலும் வரலாம். ஒவ்வொருவருக்கும் 

ஒவ்வொரு விதமான அலர்ஜி இருக்கும். காரணம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம். 
சிலருக்கு சிறிய மாற்றங்கள் கூட , அதாவது உணவு, வாசனை பொருட்கள் கூட ஒவ்வாமையை உண்டு 

பண்ணும். காலை எழுந்தவுடன் அடுக்குத் தும்மல், கண்களில் தொடர்ந்து நீர் வடிதல், கண்களில் 

எரிச்சல் (அ) நமைச்சல், தோல் அரிப்பு, தோலில் சிவந்த தடிப்பு, மூக்கடைப்பு, இவைகள் எல்லாம் 

சமகாலத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சினைகள். இவற்றிற்கு காரணம் அலர்ஜியே.. சரியான 

காரணத்தை கண்டுபிடித்து அலர்ஜியை குணப்படுத்த முடியும். ஆனால் அலர்ஜியை ஆரம்பத்தில் 

பலரும் ஒரு பொருட்டாகவே கருதாமல் விட்டு விடுவதால் பின்னாளில் பல வியாதிகளை எதிர் 

கொள்கிறார்கள்.

 நாய், பூனை, கிளி மற்றும் புறா போன்ற செல்ல பிராணிகளுடன் ஒட்டி உறவாடுவதன் மூலமும், 

தோலிற்கு ஒவ்வாமல் அரிப்பு ஏற்படுத்தும் துணி வகைகளை அணிவதனாலும், துணிகளில் உள்ள 

சாயம் போன்ற வேதி பொருட்களாலும், பூச்சிக்கடி , பிளாஸ்டிக்பொருட்கள், பால் மற்றும் சில உணவு 

வகைகளாலும், மருந்து வகைகளாலும் அலர்ஜி உண்டாகலாம். புளிப்பான மற்றும் குளிர்ச்சியான 

உணவுகள் சிலருக்கு அலர்ஜியை உண்டு பண்ணும். நாம் உண்ணும் உணவில் உள்ள தக்காளி, 

கத்தரிக்காய், முட்டை, இறைச்சி, ஊறுகாய், வற்றல், கருவாடு, கரம் மசாலா, சிக்கன், 

சாக்லேட்டுகளால் கூட அலர்ஜி உண்டாகும். பிரிட்ஜில் அதிக நாட்கள் வைத்திருக்கும் பால், தயிர், 

மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

 சிலருக்கு மாத்திரைகளால் கூட அலர்ஜி உண்டாகும். அலர்ஜியால் உடம்பில் கொப்புளம், தடிப்பு, 

அரிப்பு, திட்டு திட்டாக சிவந்து போதல், தோல் வெடித்து புண்ணாதல் , காய்ச்சல் என பல நோய்கள் 

தோன்றும். பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் சுத்தமாக பராமரிப்பது மிக 

முக்கியம். அலர்ஜி ஏற்படுத்தும் உணவு மற்றும் மருந்து வகைகளை கண்டறிந்து தவிர்ப்பதன் மூலம் 

தொல்லைகளிருந்து மீளலாம். சுற்று புறத்தை தூசுகளின்றி தூய்மையாக வைப்பதன் மூலமும், தூசு 

அதிகமுள்ள இடங்களில் இருப்பதை தவிர்ப்பதன் மூலமும், ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவு 

பொருட்களை தவிர்ப்பதன் மூலமும் அலர்ஜியில் இருந்து விடுபடலாம். இதற்கு நிரந்த தீர்வு 

கண்டிப்பாக உண்டு.

ஒவொருவரும்  மருத்துவரின் ஆலோசனை பெற்று சரியான மருந்தை எடுக்கவும்.
இந்த தகவல் வலைதளத்தில் இருந்து பெற்றது. பதிவிட்டவருக்கு நன்றிகள்.