புதன், 23 அக்டோபர், 2019

கந்த சஷ்டி விரதம் பயனும் முறையும்

கந்த சஷ்டி விரதம் 
பயனும் முறையும் 

உ 

கணபதி துணை 

விநாயகர் துதி 

உலகத்துக்கு காதியாய் தேவருக்காதியாய் உலவாச்
சுகத்துக் காதியாய் சுரர்களுக் கீசராய்ச் சுடரும் 
மகத்துக் கீசராய் கணங்களுக் கீசராய் மதிப்போர் 
அகத்துக் கூடியகணேச நின்னடி யிணைத்தொழுதாம்

கந்த சஷ்டி விரதம்

ஓம் சரவணபவாய  நம   

எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக சிறந்த முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. இதைத் தான் முன்னோர்கள் சஷ்டியில் இருந்தால் அகப்பை (அகத்தே இருக்கும் கருப்பை) யில் வரும் என்று பழமொழியாக கூறுவார்கள். இதுவே காலப்போக்கில்  சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று மாற்றி  சொல்லப்படுகிறது. முசுகுந்த சக்ரவர்த்தி வசிஷ்ட மகரிஷியிடம் இவ்விரதம் பற்றி கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள் தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

வேண்டுவனயாவும் தரும் இந்த  சஷ்டி விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

ஐப்பசி மாதத்தில் வருகின்ற தீபாவளிக்கு அடுத்து  வருக்கின்ற பிரதமை திதி முதல்  6 நாட்களும் சஷ்டி திதி வரை விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சஷ்டி என்றால் ஆறு. முதல் நாள் அதிகாலை எழும்பி காலை கடன் முடித்து குளித்து பின் தூய ஆடை அணிந்து சுவாமி அறைக்கு வந்து நெற்றி நிறைய நீறணிந்து சந்தனமும் குங்குமமும் அணிந்து விளக்கேற்றி குலதெய்வத்தை மனதார வணங்குகள்.

பின் விரதம் இருக்க தடையில்லாமல் இருக்கவும் விரதம் இருந்தால்  ஏற்படும் பலன் சிறப்பாக கிடைக்கவேண்டும் என பிள்ளையாரை மனதார வேண்டுங்கள். அதன் பின் வீட்டில் இருக்கும் முருகனின் படத்தையோ அல்லது முருகனின் சிறிய விக்கிரகத்தையோ சுத்தம் செய்து ( சுத்தமான ஈரத்துணியால் துடைத்தோ அல்லது தூய நீரினால் அபிஷேகம் செய்து) கையில் எடுத்து வைத்துக்கொண்டு, முருக பெருமானை மனமுருகி அன்போடு உங்களின் வீட்டில் பரிபூரணமாக வரும்படி கும்பிடுங்கள். பின் சந்தனம், குங்குமம், பூ போன்றவற்றால் அலங்கரிக்கவும். பூஜைக்குரிய இடத்தில் கோலமிட்டு, அதன் மீது ஆசன பலகையில் விக்ரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து, தீபம் ஏற்றி ,சாம்பிராணி காட்டி, அந்த அறை வாசனை கமழச்செய்யுங்கள் . அப்போது கந்தசஷ்டி கவசம், கந்தகுருக்கவசம், கந்தரநுபூதி , சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்கு தெரிந்த துதிகளை பாடுங்கள். அல்லது கேளுங்கள் ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், சரவணபவா சரணம் என்று உங்களுக்கு தெரிந்த சரணகோசம் செய்யுங்கள். நிறைவாக தீபம் காட்டி உங்களால் இயன்றதை நிவேதனம் செய்யுங்கள். (பால், பழம் இருந்தாலும் போதும்)
எளியோருக்கு எளியோனான கந்த கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வார். ஆனால் இதை முழுமனதோடு முருகப்பெருமானே அங்கு இருப்பதாக,  இருப்பதை உணர்ந்து  செய்யுங்கள்.

அன்று மாலை, பக்கத்தில் இருக்கும் முருகன் கோயிலுக்குப் போய்  முருகப்பெருமானை தரிசனம் செய்து அன்றைய விரதத்தை அவரவர் வயது மற்றும் உடல் நிலைக்கு ஏற்ப, மிளகும் தண்ணீரும், அல்லது பாலும் பழமும், அல்லது ஒரு நேர உணவுடன் அன்றைய விரதத்தை நிறைவுசெய்யுங்கள்.
இப்படி 5 நாட்களும் இருந்து 6வது  நாள் சூரன் போர் பார்த்து, பிராயச்சித்த அபிஷேக தரிசனம் முடித்து  இளநீர் அல்லது சர்க்கரை சேர்த்த தேசிக்காய் தண்ணீர் அருந்தி அன்றைய விரதத்தை முடித்துகொண்டு.

பின் சஷ்டி திதி முடியும் வரை காத்திருந்து , மறுநாள் விடியற்பொழுதில்  பறவைகள் எழும்முன்  குளித்து, தூய ஆடை அணிந்து முருகப்பெருமானுக்கு பூஜை செய்துவிட்டு,  சமைத்து சாப்பிட கால அவகாசம் இல்லாததால், பூசை முடித்தவுடன் முதலில் 1 வில்வ இலையை சாப்பிட்டு தண்ணீர் அருந்தி விரதத்தை முடித்துக்கொண்டு, பின் சமையல் முடிந்ததும் சாப்பிட்டு முழுமையாக விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.  21 வகையான மரக்கறிகளை கொண்டு (உங்களின் வசதிக்கேற்ப எண்ணிக்கையை  குறைத்துக்கொள்ளலாம் ) உணவு சமைத்து பாறணையில் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள். இப்படி 
இந்த விரதத்தால் வேலவனின் பரிபூரண அருட்கடாச்சத்தால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கிட்டும், கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

சஷ்டியில் ஷண்முகன் தரிசனம்.

ஆறு என்ற எண். முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவரது திருமுகங்கள் ஆறு. கார்த்திகை மாதர் அருவரால் வளர்க்கப்பட்டவன். அவனது மந்திரம் ஆறெழுத்து. நம குமாராய அல்லது சரவண பவ. அவருடைய இருப்பிடம் அறுபடை வீடுகள். அவருக்குரிய விரத நாட்கள் ஆறு, சஷ்டி விரதம். மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன.

சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையில் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான்.

சுப்ரமணியருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம்பெறுகின்றது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவர் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவர் என்றும் இதற்குப்  பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவது விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத் தலம் சிதம்பரம். அங்கு உஷத் காலத்தில் பெருமானின் கலைகள் எல்லாம் எல்லாத் தலங்களுக்கும் சென்று தெய்வப் பொலிவூட்டும் என்றும், அர்த்தஜாம காலத்தில் ஆயிரம் கலைகளும் பெருமானிடம் ஒடுங்குகின்றன என்றும், எனவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசிக்கும் புண்ணியத்தை, சிதம்பரத்தில் அர்த்தஜாமத்தில் வழிபடுவதால் பெற முடியும் என்று சிதம்பர மஹாத்மியம் குறிப்பிடுகிறது.

சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் அதாவது அர்த்தஜாமத்தில் செய்யப்படும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள்.  திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகப்பெருமான் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே மூலவருக்கு வழிபாடு செய்வர்.

ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளிச் செய்த குமாரஸ்தவம் என்னும் பாராயண நூலில், 25- வது மந்திரம் ஓம் சஷ்டி பதயே நமோ நம  என்பதாகும், சஷ்டிதேவியின் நாயகனாக விளங்கும் சண்முகப் பெருமானுக்கு வணக்கம் என்பது இதன் பொருள். சஷ்டிதேவி, தேவசேனைப் பிராட்டியாரின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள். அதனால் தேவசேனைக்குரிய சஹஸ்ரநாமத்தில் ஓம் சஷ்டியை நம, ஓம் சஷ்டிஈச்வர்யை நம , ஓம் ஷஷ்டி தேவ்யை நம, எனும் மந்திரங்கள் வருகின்றன. ஆறில் ஓர் அம்சமாகத் தோன்றியதால், இவள் சஷ்டிதேவி என்று அழைக்கப்பெறுகிறாள். பச்சிளங்குழந்தைகளை பெற்றத்தாய் கவனிக்காத நேரங்களில் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்த தேவியின் வரலாறு தேவி பாகவதத்தில் 9 தாவது ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர். 

சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலேயே  இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டார். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாததால், காச்யப்ப மகரிஷியை கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையை பெற்றாள் . ஆனால் குறைப்பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது, மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்க வேண்டும் என முடிவெடுத்தான்.. அப்போது அங்கே ஒரு தேவதை தோன்றினால் உயிரற்ற - உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொட்டாள் , உடனே குழந்தை அழகிய உருவத்துடன் மாறி உயிர்பெற்று அழத்தொடங்கியது.

பிரியவிரதன் மிகவும் மகிழ்ந்து,தேவி தாங்கள் யார் என்று கேட்டான், அதற்கு 
அந்த தேவதை நான் சஷ்டி தேவி, தேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான் பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்பவள் , பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு அவ்வரத்தை அருள்பவள். மாங்கல்ய பலம் இழக்கும் நிலையில் உள்ளவருக்கு அதனை நிலைப்படுத்துபவள். 
அவ்வாறே வினைப்பயன் எப்படி இருப்பினும், அவரவர் வேண்டுகோளுக்கு இணங்கி, கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும், செல்வப்பேற்றையும் அருளுபவள் என்று கூறி,  அந்த குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டாள்.
குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவி, எப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும் மகிழ்வாள். இவள், அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள். யோகசித்தி மிக்கவள். பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு ஆறாம் நாளிலும் இருபத்தோராம் நாளிலும் சஷ்டிதேவியை வழிபடவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

ஐப்பசி மாதத்தில் வரும் மஹா ஸ்கந்த சஷ்டியை போன்று, ஆனி  மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியை குமார சஷ்டி என்று அழைப்பர். அதைப்  போல கார்த்திகை மாதத்து வளர்பிறை சஷ்டியை சம்பக சஷ்டி என்றும், சுப்ரமண்ய சஷ்டி என்றும் அழைப்பர். இந்த சம்பக சஷ்டியை அனந்தசுப்ரமண்ய விரதம் என்றும் அழைப்பர். சஸ்டிப் ப்ரியனான முருகப்பெருமான், சஷ்டியில் விரதமிருப்பவர்களுக்கு குழந்தைப்பேறு வழங்குகின்றார்.

செகமாயை என்று தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில், முருகனையே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்த திருப்புகழை சஷ்டி விரதத்தின்  போது பாராயணம் செய்வோருக்கு முருகப்பெருமானே குழந்தையாக பிறப்பார் என்று வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் குறிப்பிட்டுள்ளார். 

புத்திரப்பேறு நல்கும், 
அருணகிரிநாதர் அருளிய ஸ்வாமிமலைத் திருப்புகழ்.

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
     திருமாது கெர்ப்ப ...... முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
     திரமாய ளித்த ...... பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
     மலைநேர்பு யத்தி ...... லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
     மணிவாயின் முத்தி ...... தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
     முலைமேல ணைக்க ...... வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
     மொழியேயு ரைத்த ...... குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
     தனியேர கத்தின் ...... முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
     சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

செகமாயை யுற்று ... இந்த உலக மாயையில் சிக்குண்டு,

என் அகவாழ்வில் வைத்த ... எனது இல்லற வாழ்வில் எனக்குக்
கிட்டிய

திருமாது கெர்ப்பம் உடல் ஊறி ... அழகிய மனைவியின் கருவில்
உருவாகி அவளது உடலில் ஊறி

தெசமாத முற்றி ... பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து,

வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த ... நல்ல வடிவோடு கூடி
பூமியில் நன்கு தோன்றிய

பொருளாகி ... குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து,

மக அவாவின் ... குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை

உச்சி விழி ஆநநத்தில் ... உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து,
முகத்தோடு முகம் சேர்த்து,

மலைநேர்புயத்தில் உறவாடி ... எனது மலை போன்ற தோள்களில்
நீ தழுவி உறவாடி,

மடிமீதடுத்து விளையாடி ... என் மடித்தலத்தில் அமர்ந்து
குழந்தையாக விளையாடி,

நித்த மணிவாயின் முத்தி தரவேணும் ... நாள்தோறும் உன் மணி
வாயினால் முத்தம் தந்தருள வேண்டும்.

முகமாய மிட்ட குறமாதி னுக்கு ... முக வசீகரம் மிக்க குறப்பெண்
வள்ளியின்

முலைமேல் அணைக்க வருநீதா ... மார்பினை அணைக்க வந்த
நீதிபதியே*,

முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள் ... பழம் பெரும்
வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே

மொழியேயு ரைத்த குருநாதா ... பிரணவப் பொருளை சிவனாருக்கு
உபதேசித்த குருநாதனே,

தகையாது எனக்கு ... தடையொன்றும் இல்லாது எனக்கு

உன் அடிகாண வைத்த ... உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த

தனியேரகத்தின் முருகோனே ... ஒப்பற்ற திருவேரகத்தின்
(சுவாமிமலையின்) முருகனே,

தருகாவிரிக்கு வடபாரிசத்தில் ... மரங்கள் இருபுறமும் நிறைந்த
காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே

சமர்வேலெடுத்த பெருமாளே. ... போர் வேல் விளங்க நிற்கும்
பெருமாளே.

தென்காசிக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் குமார சஷ்டி விழா ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனை தாரக ஹர குமார சஷ்டி என்று அழைக்கிறார்கள். இவ்விழாவில் படிப் பாயசம் வழங்குவது விஷேசமானது.

சரவணபவ தத்துவம் 

சேனானீனாம் அஹம்  ஸ்கந்த ; படைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில்.  சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன் , தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்கள், அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின் மறு  அவதாரத்தால் அழிவை வேண்டினர். அவ்வாறே சிவபெருமான் அவர்களுக்கு வரம் அளித்தார். ஆகவே சிவன் தங்களை அளிக்கமாட்டார் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர் . பிரம்மா விஷ்ணு முதல் யாவரும் மோன நிலையில் இருந்த சிவபெருமானை வேண்டினர். அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மனம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவபெருமான் தமது ஐந்து முகங்களுடன் அதோமுகத்தினின்றும்  ஜோதியை எழுப்பி, வாயுவையும்  அக்கினியையும் அதை  ஏந்தி கங்கையில் இடச்செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள் , அங்கு 6 ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர் . அதனால் முருகன், கார்த்திகேயன், சரவணபவன், காங்கேயன் என்று துதிக்கப்படுகினான்.

உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகைகள் , இருகால்கள் , ஓருடலாகக் கந்தனாக (கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்த தினம் வைகாசி மாத - விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறுஉருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமணியன், என்றும் இளையவன்,  அதனால் குமரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருகு  என்றால் அழகு)

மு - முகுந்தன் என்கிற விஷ்ணு 
ரு - ருத்ரன் என்கிற சிவன் 
க - கமலத்தில் உதித்த பிரம்மன் 

ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அளித்தல்  என்று மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவானவன். காஞ்சி குமரப்  பெருமானால் அடி எடுத்துக் கொடுக்கப்பட்டு கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் முருகன் அவதாரத்தை இவ்வாறு கூறுகிறார்.

அருவமும் உருவமாகி 
அநாதியாய் பலவாய், ஒன்றாய்ப் 
பிரம்மமாய்  நின்ற ஜோதிப் 
பிழம்பதோர் மேனியாகிக் 
கருணைகூர் முகங்கள் ஆறும் 
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே 
ஒரு திருமுருகன் வந்து ஆங்கு 
உதித்தனன் உலகம் உய்ய !

ஆறுபடை வீடுகளும் குண்டலினி சக்தியின் ஆறு தலங்கள் .

முதல் படை வீடு : மூலாதார சக்கரம் .  திருப்பரங்குன்றம் 
தேவேந்திரன் கந்தனுக்குத் தன் பெண் தெய்வயானையை மணம் புரிவித்தான். திதி சப்தமி. நடந்த இடம் திருப்பரங்குன்றம்.

இரண்டாம் படை வீடு: ஸ்வாதிஷ்டான சக்கரம்  . திருச்செந்தூர் 
சூரன் போர் நடந்து சூரனுக்கும் அருளிய தலம். திதி தீபாவளி அமாவாசைக்கு பின் வரும் ஆறாம் நாள். சஷ்டி திதி. தலம்  திருச்செந்தூர்.

மூன்றாம் படை வீடு: மணிபூரக சக்கரம்  .  பழனி 
ஞானப்பழம் கிடைக்காமல் கோபம் கொண்டு பாலன் தண்டத்துடன் கௌபீனம் அணிந்து ஆண்டியான தலம். பழனி 

நான்காம் படை வீடு: அனாஹத சக்கரம்  . சுவாமிமலை 
பிரணவத்திற்கு பொருளறியா பிரம்மனை சிறைபிடித்து, சிவபெருமானுக்கு பிரணவப்பொருளுரைத்த தலம். சுவாமிமலை.

ஐந்தாம் படை வீடு : விசுக்தி சக்கரம் .  திருத்தணி 
தைப்பூசத்தன்று உதித்த வள்ளியை பல நாடகங்கள் ஆடி கடைசில் தரிசனம் கொடுத்து, பின் மணம்முடித்த தலம். திருத்தணி.

ஆறாம் படை வீடு: ஆக்ஞ சக்கரம் .   பழமுதிர்ச்சோலை
சிறுவனாக தோன்றி ஒளவைக்குச் சுட்ட பழத்தைக்  கொடுத்து பாடவைத்துத் தரிசனம் தந்த தலம். பழமுதிர்ச்சோலை

ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன?

ஒரு முகம் - மகாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு ,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு ,
நான்கு முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அம்மனுக்கு, காயத்திரி தேவிக்கு,ஹேரம்ப    கணபதிக்கு,
ஆறு முகம் - கந்தனுக்கு

நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுகிறார்:
1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒருமுகம் 
2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்.
3. வேள்விகளை காக்க ஒரு முகம்.
4. உபதேசம் புரிய ஒரு முகம்.
5. தீயோரை அழிக்க  ஒரு முகம்.
6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.

குமரகுருபரர்- கந்தர் கலிவெண்பாவில் 
சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம் 
முக்தி அளிக்க ஒரு முகம் 
ஞானம் அருள ஒரு முகம்.
அக்ஞானம் அழிக்க ஒரு முகம் 
சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம் 
பக்தர்களுக்கு அருள ஒரு முகம்.

அருணகிரிநாதர் பாடல் 
ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே 
ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே 
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே 
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே 
மாறுபாடு சூரரை வதைத்த முகம் ஒன்றே 
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே 
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும் 
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

திருச்செந்தூர் புராணம் சண்முகனை இவ்வாறு கூறுகிறது.

ஷடரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத் 
ஷட் ஸூத்ரம்  ஷன்மதம் ஷட்வேதாங்கம் ஷன்முகம் பஜே!

 ஷடரிம் - காமம், குரோதம், லோபம், மதம், மாத்சர்யம், மோகம் என்ற ஆறு அவகுணங்களை போக்குபவன் கந்தன், 

ஷட்விகாரம் - உண்டாக்குதல், இருத்தல், வளர்த்தல், மாற்றமடைதல், குறைதல், அழித்தல் , என்ற ஆறு செயல்கள் அற்றவன்.

ஷட்கோசம் - அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு நிலைகளில் இருப்பவன். 

ஷட்ரஸம்  - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு, என்ற ஆறு வகை சுவைகளாக இருப்பவன்.

ஷட் ஸூத்ரம் - ஸாங்க்யம், வைசேஷிகம், யோகம், ந்யாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என்ற ஆறு சாத்திரங்களாக இருப்பவன்.

ஷன்மதம் - காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம்  என்ற ஆறு மத தத்துவமாக இருப்பவன். ஆக ஷண்முகனை வணங்குதல் ஆறு மத ஈடுபாட்டுக்கு சமம்.

ஷட்வேதங்கம் - சிக்ஷ, கல்பம், வ்யாகரணம் , நிருக்தம் , ஜ்யோதிஷம், சந்தம்  என்ற ஆறு வேதங்களாக இருப்பவன்.

ஷண்முகம் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம்  என்ற சிவபெருமானின் ஐந்து முகங்களுடனும் அதோ முகத்துடன் கூடியும் உள்ளவன்.

சரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் 
இதன் மகிமை என்ன?

ஸ - லக்ஷ்மிகடாக்ஷம் 
ர - சரஸ்வதி கடாக்ஷம் 
வ - போகம் - மோக்ஷம் 
ண  - சத்ருஜயம் 
ப - ம்ருத்யுஜயம் 
வ - நோயற்ற வாழ்வு 

ஆக, ஷடாக்ஷரம் கூறி இந்த அனைத்து பயன்களையும் பெறலாம்.

ஓம் நம: சரவணபவாய என்பது குஹ  தசாக்ஷரம் (10)
ஓம் நம : சரவணபவ நம ஓம்  என்பது குஹ த்வாதசாக்ஷரம் (12)

கந்த சஷ்டி விரதம் பற்றிய கேள்விகளுக்காண விடைகள்.
    கந்த சஷ்டி விரத கால நிர்ணயம் செய்யப்பட வேண்டியது சாந்திர மாதத்திலா? சௌரமாதத்திலா?
இவ்விரதத்தினை சாந்திர மாதத்தை அடிப்படையாய்க் கொண்டே அனுஷ்டிக்க வேண்டும் என்பது விதி.
    கந்த சஷ்டிக்குரியது எந்தப் பட்சம்?
இவ் விரதத்திற்குரிய பட்சம் சுக்ல பட்சமாகும் (வளர்பிறை).
    கந்த சஷ்டிக்குரிய திதி எது?
இவ் விரதத்திற்குரிய திதி வளர்பிறை பிரதமை தொடங்கி சஷ்டி ஈறாகிய  ஆறு திதிகளுமாம். சப்தமி திதியில் பாரணை செய்து விரதத்தை முடித்தல் வேண்டும்.
கந்த சஷ்டி விரத கால முழுமை நிர்ணயம்
இது சாந்திரமான ஐப்பசி மாதத்து சுக்கில பட்ஷ பிரதமை முதல் சஷ்டி ஈறாகிய ஆறு நாட்களும் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாம்.
கந்த சஷ்டி விரத தொடக்கத்திற்கான நிபந்தனை
மேற்படி விரதத்தினை வெறுமனே ஐப்பசி மாதப் பிரதமையில் தொடங்க இயலாது. ஐப்பசி மாதத்தில் வரும் கிருத்திகா சுத்தப் பிரதமையில் தான் கந்தசஷ்டி விரத ஆரம்பத்தினைக் கொள்ள வேண்டும்.
    மேற்கோள் – கிருத்திகா சுத்தப் பிரதமையில் கந்தசஷ்டி ஆரம்பத்தினைக் கொள்வதே ஆகம சம்மதமாகும்.
கந்த சஷ்டி விரதத்தினை முடிப்பது எப்போது?
மேற்சொன்ன பிரதமையில் தொடங்கி சஷ்டி திதி முடியும் வரை விரதம் அனுஷ்டித்தல் வேண்டும்.
மேற்கோள் 1. ஐப்பசி மாதத்து சுக்கில பட்ஷ பிரதமை முதல் சஷ்டி ஈறாகிய ஆறு நாட்களும் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாம். (ஆறுமுகநாவலர் சைவ வினாவிடை 2)
மேற்கோள் 2. கந்தசஷ்டி விஷயத்தில் கிருத்திகா சுத்தப் பிரதமை தொடங்கி சஷ்டி முடிய விரதானுஷ்டானம் விதிக்கப்பட்டிருக்கிறது(சிவாகம வித்தகர் சிவஸ்ரீ எஸ். சுவாமிநாத ஆச்சாரியார், தர்மபுர ஆதீனம்)
விரதம் முடித்துப் பாறணை செய்வது எப்போது?
சஷ்டி முடிந்து மறுநாள் காலை வரும் சப்தமி திதியில் விரதம் முடித்துப் பாறணை செய்தல்
வேண்டும்.
கந்த சஷ்டி விரதத்தில் பாறணை சொல்லப்பட்டிருக்கிறதா?
கந்தசஷ்டி விரதத்தைப் பொறுத்தவரையில் பாறணையும் அவசியமென்றே கந்தபுராணம் கூறுகிறது.
மேற்கோள் 1. கந்தபுராணம் ஸ்கந்த விரதப்படலத்தில் வரும் 23ஆம் பாடலையும் அதற்கான நம் நாட்டுப் பேரறிஞர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களின் உரையையும் கீழே தருகிறேன்.
     ஆரண முனிவர் வானோர் அங்(கு) அதன் மற்றை வைகல்
    சீரணி முருகவேட்கு சிறப்பொடு பூசையாற்றி
    பாறணம் விதியில் செய்தார் பயிற்றும் இவ்விரதம் தன்னால்
    தார் அணி அவுணர் கொண்ட தம் பதத் தலைமை பெற்றார்.
(வேதம் உணர்ந்த முனிவர்களும், தேவர்களும் அந்த சஷ்டித் தினத்திற்கு அடுத்த தினமாகிய சப்தமியில் திருவருட் சிறப்பமைந்த முருகப்பிரானுக்கு வெகு சிறப்பாக விசேட பூசை செய்து விதித்ததன் பிரகாரம் பாறணம் செய்தார்கள். அனுட்டிக்கும் இந்த விரத விசேடத்தினாலே மாலையை அணிந்த அசுரர்கள், தம்மிடமிருந்து கவர்ந்துகொண்ட தத்தம் பதத்தின் தலைமையை மீண்டும் பெற்றார்கள்.)
மேற்கோள் 2. நமது நாட்டின் சைவத் தமிழ்க் காவலரான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களாலும்,சிதம்பரம் பாடசாலை அறங்காவலர் பொன்னம்பலபிள்ளை அவர்களாலும் எழுதப்பெற்ற காசி மட வெளியீடான கந்தபுராண உரைநடை நூலில் வரும் மற்றொரு மேற்கோளையும் இங்கு தருகிறேன். கந்த விரதப்படலத்தில் வரும் அப்பகுதி இதோ
“சுப்பிரமணியக்கடவுளுக்குரிய ஒப்பில்லாத விரதம் வேறுமொன்றுளது.அதனையுஞ்சொல்வோம். முசுகுந்தனே கேட்பாய். தேவர்களும் முனிவர்களும் துலா மாசத்துச் சுக்கில பட்சப் பிரதமை முதலாக ஆறு நாளும் காலையில் ஸ்நானம் செய்து சுத்த வஸ்திரம் இரண்டு தரித்து சந்தியா வந்தனம் முடித்து கிரௌஞ்ச மலையையும்   சூரபன்மனையும் சங்கரித்த வேலாயுதராகிய முருகக் கடவுளை தம்ப விம்ப கும்பம் என்னும் மூன்றினும் இரவிலே விதிப்படி பூசை செய்து வெல்லம் சேர்த்து நெய்யினாற் சமைத்த மோதகத்தை நிவேதித்து பிற உபசாரங்களையும் செய்து, வணங்கித் துதித்து அவருடைய புராணத்தைப் படித்து சிறிது ஜலத்தை ஆசமித்து உபவசித்திருந்து சப்தமி திதியில்  முருகக் கடவுளுக்கு விஷேச பூசையியற்றி விதிப்படி பாரணஞ்    செய்து,  பதங்களைப் பெற்றார்கள்.” (பக்கம் 667)
மேற்படி இரண்டு மேற்கோள்களாலும் பாறணையும் விரதத்தின் ஒரு பகுதியே என்பதையும்,
அதனை சப்தமி காலையிலேயே செய்த வேண்டும் என்பதனையும் அறிந்து கொள்கிறோம்.
சூரன்போருக்கும் கந்த சஷ்டி விரதத்திற்குமான தொடர்பு என்ன?
சஷ்டி திதியில் முருகன் சூரனை வதைந்தமையே சஷ்டிக்கும், சூரன் போருக்குமான தொடர்பு.
சூரன் போருக்குப் பின் தான் சஷ்டி விரதம் வந்ததா?
இல்லை. அது தவறான கருத்து. சூரன் அழியவேண்டும் என்பதற்காக தேவர்கள் கந்தசஷ்டி விரதம் பிடித்ததாக கந்தபுராணம் கூறுகிறது. முன் சொன்ன இரண்டு மேற்கோள்களும் இதற்கும் சான்றாம்.
கந்த சஷ்டி விரதம் ஆரம்பித்தது எப்போது?
கந்தசஷ்டி விரத ஆரம்பம் பற்றி அபிதான சிந்தாமணி நூலில் பின்வருமாறு
கூறப்பட்டிருக்கிறது.  பிரதமையில் சிவனிடம் பிறந்த நெற்றிக்கண் பொறிகள், துதியையில்
கௌரியின் கற்பத்திலிருந்து திருதியையில் அக்கினியிடம் கொடுக்க அவன் அதைப் பெற்று சதுர்த்தியில் கங்கையிடமிருந்து பஞ்சமியில் கார்த்திகைப் பெண்கள் பாலூட்ட ஆறு முகமும் பன்னிரண்டு கையும் பெற்று வளர்ந்த நாள். இதுவே கந்தசஷ்டி விரதம் ஆரம்பித்த வரலாறு.
கந்த சஷ்டி விரதத்தில் ஆலயங்களில் சூரன்போர் செய்யும் முறை எங்கேனும் விதிக்கப்பட்டிருக்கிறதா?
இல்லை. கந்தபுராணக் கதையை ஒட்டியே மேற்படி கிரியை முறை ஆலயங்களில்
நடாத்தப்படுகிறது.
சஷ்டி திதி இரண்டு நாட்களில் பங்கிடப்பட்டு இருக்கும்போது முதல் நாளில் சூரன்போர் செய்து விரதத்தை முடிப்பது சரியா?
தவறு. விரத நிர்ணயத்தில் சஷ்டி திதி முடியும் வரை விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும்
என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே இரண்டு நாட்களில் திதி நிற்குமாயின் இரண்டாம் நாள் திதி
முடியும் வரை விரதம் இருந்து சப்தமி வரும் மூன்றாம் நாளில் பாறணை இயற்றுவதே சரியாகும்.
திதி நிற்கும் இரண்டாம் நாளில் அத் திதி முடிந்த பிறகு சப்தமியில் பாறணை இயற்றல் ஆகாதா?
காலைச் சந்தியில் வழிபாடியற்றி விரதம் முடிப்பதுவே சிறந்தது. எனவே இடை நேரத்தில்
பாறணை இயற்றுவது பொருந்தாது.
சஷ்டித் திதி நிற்கும் இரண்டாம் நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக அத்திதி முடிந்துவிட்டால் அதன் பின் சூரன்போர் செய்வது பொருத்தமில்லை என்பது உண்மையா? இரவும் பகலும் இல்லாத நேரத்திலே தான் சூரனைக் கொள்ள முடியும் என்பது உண்மையா?
முன்பு சொன்னது போல சஷ்டியில் சூரன்போர் நடத்துவது வெறும் சம்பிரதாயமே சூரன் போருக்காக சஷ்டி முடியும் முன் விரதத்தை முடிப்பதும், சஷ்டி நிற்கும் நேரத்திலும், மதியம் முதலிய நேரங்களிலும் பாறணை செய்வதும் பாவம்.
வேண்டுமானால் சஷ்டி நிற்கும் நேரத்திற்குள் சூரன் போரை நடத்திக்கொள்ளலாம். சூரன் போர் நடத்தும் நேரத்தில் சஷ்டி விரதத்தை முடிக்க முடியாது.
அந்திப்பொழுதில் இறக்கும் வரத்தைப் பெற்றிருந்தவன் இரணியன் மட்டுமே.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை
சைவ விரத நிர்ணயம்
சைவ விரதங்கள்
உலகில் உயிர்கள் பிறந்த நோக்கம், இறைவனை அடைவதுவே. அங்ஙனம் உயிர்கள் இறைவனை அடைய, வழிபாடொன்றே வழி. அவ்வழிபாட்டினுள் உயர்ந்தோரால் விதிக்கப்பட்ட விரதங்களை மேற்கொள்ளுதல் சிறந்ததாய்க் கருதப்படுகிறது. சைவ விரதங்கள் பலவாய் விரிகின்றன. அவ் விரதங்களுக்காய் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பல நூல்களிலும் பொதிந்து கிடக்கின்றன. அங்ஙனம் விரத நியதிகளை விதித்த நூல்களை முதலில் நாம் அறிந்து கொள்ளுதல் அவசியம்.
சைவ நூல் வரிசை
வேத, ஆகம, புராண, இதிகாசம் என்பதே சைவ நூல் வரிசையாம். இந்நூல் வரிசையில் இறைவனால் அருளிச் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வனம் என நான்காம்.
அங்ஙனமே இறைவனால் அருளிச்செய்யப்பட்ட ஆகமங்கள் காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம்,அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புயம்,ஆக்கினேயம்,வீரம்,ரௌரம்,மகுடம்,விமலம், சந்திரஞாலம், முகவிம்பம்,புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம் என இருபத்தெட்டாம். இவை தவிர உப ஆகமங்கள பலவும் உள.
புராணங்கள் சைவம், பவிஷ்யம், மார்க்கண்டம், இலிங்கம், காந்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரமாண்டம், காரூடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், பிரமம், பதுமம், ஆக்நேயம், பிரம்மகைவர்த்தம் என பதினெட்டாம். இவை தவிர, உப புராணங்கள் பதினெட்டும் உள.
இதிகாசங்கள் இராமாயணம், மகாபாரதம், சிவரகசியம் என மூன்றாம். பெரும்பாலும் இவற்றுள் ஆகம, புராண, இதிகாசங்களே விரதங்களை நிர்ணயிக்க பயன்படுகின்றன.
விரதங்களும் ஆகமங்களும்
நம் சைவ சமயத்திற்கு வேதங்கள் பொது நூல் எனவும், ஆகமங்கள் சிறப்பு நூல்கள் எனவும் உரைக்கப்படுகின்றன. மூல ஆகமங்கள் 28. சிறப்பு நூலாகிய ஆகமம் சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் என நான்காக வகுக்கப்படும். ஆகமங்களின் சரியா, கிரியாபாதங்களில், வழிபாடு சார்ந்த அனைத்துக் கிரியைகளுக்கான வரையறைகளும் உரைக்கப்படுகின்றன. யோக, ஞானபாதங்களில் அறிவு மார்க்கமாய் இறைவனை அடைவதற்கு உரைக்கப்பட்ட தத்துவங்கள் விரித்துரைக்கப்படுகின்றன. ஆகமங்களின் நான்கு பாதங்களிலும் அமையும் விடயங்கள் பின்வருமாறு:
சரியா பாதத்தில் அமைபவை – பிராயச்தித்த விதி, பவித்திர விதி, சிவலிங்க லட்சணம்,செபமாலை,யோகப்பட்டம் முதலியவற்றின் இலட்சணம்.
கிரியா பாதத்தில் அமைபவை – மந்திரங்களின் உத்தாரம், சந்தியாவந்தனம், பூசை
செப ஓமங்கள், சமய, விசேட, நிர்வாண ஆச்சாரியர் அபிசேகங்கள்
யோக பாதத்தில் அமைபவை  – 36 தத்துவங்கள், தத்துவேசுரர், இயம, நியம, ஆசன சமாதி முறை
ஞானா பாதத்தில் அமைபவை – பதி, பசு, பாச இலட்சணங்கள்
(?)ஆகமங்களின் கிரியாபாதத்திலேயே விரதங்கள் பல நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அங்ஙனம் ஆகமங்கள் பொதுப்பட விதித்த விரத நியதிகளை பின் வந்த யோகக் காட்சிமிக்க ஞானியர் பலர் மேலும் விரித்துரைத்துப் பல நூல்களைச் செய்துள்ளனர். அந்நூல்களைக் கொண்டும் அதன் பின்வந்த ஆற்றல் மிக்க சிவாச்சாரியர் பலர் அந்நூல்களுக்குச் செய்த வியாக்கியானங்களைக் கொண்டுமே பல சைவ விரதங்கள் இன்று நிர்ணயம் செய்யப்படுகின்றன.
விரதங்களும் புராண இதிகாசங்களும்
ஆகமங்களில் விதிக்கப்படாத சில விரதங்கள் புராண, இதிகாச செய்திகள் கொண்டும் மேற்கொள்ளப்படுகின்றன. கந்தசஷ்டி விரதம் புராணங்களால் விதிக்கப்பட்ட விரதமாய்க் கருதப்படுகிறது.
விரத கால நிர்ணயம்
மாரி காலத்தில் விதைக்கப்படும் விதை விருத்தி அடைந்து வளர்வதும், கோடை காலத்தில் விதைக்கப்படும் விதை விருத்தி அற்றுப் போவதும் கால விஷேடத்தினாலேயாம். அதுபோலவே குறித்த விரதங்களை குறித்த காலங்களில் அனுஷ்டித்தால் அதற்காம் பயன் அதிகம் என்பதால், விரதங்களை எப்போது கடைப்பிடிக்க வேண்டும் எனும் கால நிர்ணயம் ஞானியரால் வரையறை செய்யப்பட்டுள்ளது.
அவ் விரத கால வரையறைகள் இருவகைப்பட்டனவாம். விரதங்களுள் சில திதிகளை அடிப்படையாய்க் கொண்டும், வேறு சில நட்சத்திரங்களை அடிப்படையாய்க் கொண்டும் வரையறுக்கப்படுகின்றன. இத்திதிகளும் நட்சத்திரங்களும் அமையும் மாதங்கள் இரு வகைப்பட்டனவாம். அவை சாந்திர மாதம், சௌரமாதம் என உரைக்கப்படும்.
திதி என்றால் என்ன?
குறித்த மாதத்தில் சூரியனோடு சமமாக நின்ற சந்திரன் சூரியனைப் பிரிந்து கிழக்கு நோக்கிப் பூமியைச் சுற்றி வந்து திரும்பவும் சூரியனைச் சந்திக்கிறது. இவ் இடைப்பட்ட காலத்தை பன்னிரண்டு பாகைக்கு ஒரு அலகு எனக் கொண்டு முப்பதாகப் பிரித்து, வளர்பிறை பிரதமை முதல் தேய்பிறை அமாவாசை ஈறாக முப்பது திதிகள் வகுக்கப்படுகின்றது.
இத் திதிகள் வளர்பிறை பிரதமை முதல் அமாவாசை ஈறாக பதினைந்தும், தேய்பிறை பிரதமை முதல் பௌர்ணமி ஈறாக பதினைந்துமாக முப்பதாகின்றன. அமாவாசை முதல் பௌர்ணமி ஈறாக வரும் திதிகளை சுக்கில பட்ச திதி அல்லது பூர்வ பட்ச திதி என உரைப்பர். பௌர்ணமி முதல் அமாவாசை ஈறாக வரும் திதிகளை கிருஷ்ணபட்ச திதி அல்லது அபரபட்ச திதி என்று உரைப்பர். இப் பூர்வ பக்கத்தினையே உலகியலில் நாம் வளர்பிறை என்கிறோம். அபரபக்கத்தினையே தேய்பிறை என்கிறோம். பூர்வம் – தொடக்கம். அபரம் – முடிவு. சுக்கிலம் – வெண்மை. கிருஷ்ணம் – கருமை. வளர்பிறைத்திதிகள், முப்பது திதிகளினதும் தொடக்கமாய் அமைவதால் பூர்வபக்கத் திதிகள் என அழைக்கப்படுகின்றன. தேய்பிறைத்திதிகள், முடிவாய் அமைவதால் அபரபக்கத்திதிகள் என உரைக்கப்படுகின்றன. அது போலவே தேய்பிறைக்காலம் இருட்காலம் ஆதலால், அத்திதிகள் கிருஷ்ணபட்சத் திதிகள் என உரைக்கப்படுகின்றன. வளர்பிறைத் திதிகள் ஒளிக்காலம் ஆதலால் சுக்கில பட்சத்திதிகள் என உரைக்கப்படுகின்றன.
இத் திதிகளுள் பௌர்ணமி அல்லது அமாவாசை முடிந்து வரும் முதல் திதி பிரதமை எனப்படுகிறது. இரண்டாவது திதி துதியை எனப்படுகிறது. மூன்றாவது திதி திருதியை எனப்படுகிறது. நான்காவது திதி சதுர்த்தி எனப்படுகிறது. ஐந்தாவது திதி பஞ்சமி எனப்படுகிறது. ஆறாவது திதி சஷ்டி எனப்படுகிறது. ஏழாவது திதி சப்தமி எனப்படுகிறது. எட்டாவது திதி அட்டமி எனப்படுகிறது. ஒன்பதாவது திதி நவமி எனப்படுகிறது. பத்தாவது திதி தசமி எனப்படுகிறது. பதினொராவது திதி ஏகாதசி எனப்படுகிறது. பன்னிரண்டாவது திதி துவாதசி எனப்படுகிறது. பதின் மூன்றாவது திதி திரியோதசி எனப்படுகிறது. பதினான்காவது திதி சதுர்த்தசி எனப்படுகிறது. சதுர்த்தசி திதிக்கு அடுத்து வருவது பூர்வபக்கமாயின் பெர்ணமித் திதி அபரபக்கமாயின் அமாவாசை திதியாம்.
நம் விரதங்களில் சில இத்திதிகளைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன.

முருகன் அழைப்பு 

வேல் முருகா மால் மருகா 
வா வா சண்முகா 
கால் பிடித்தேன் காத்தருள 
                 வா வா சண்முகா    -வேல் முருகா 
நால் வேதப் பொருளான 
நாதா சண்முகா 
நல்ல தெல்லாம் உன்பால் கொண்டாய் 
நாதா சண்முகா 

செல்வ மாகச் சிவை அணைக்கும் 
சேயே சண்முகா 
செங் கதிர்வேல் தங்கியஎன்
               தேவா சண்முகா - வேல் முருகா 
ஆறு படை வீடு டைய 
ஆண்டவா சண்முகா 
ஆனந் தமே அற் புதமே 
ஆண்டவா சண்முகா 

தேறு தலைத் தருப வனே 
தேவா சண்முகா 
சிங் கார ஓங் கார 
               சீவனே சண்முகா -வேல் முருகா 
நாறு மாலை அணி மார்பா 
நாயகா சண்முகா 
நாத விந்து கலா தீத 
நாயகா சண்முகா 

ஏறு மயில் வாக நனே 
ஏந்தலே சண்முகா 
நீறணிந்தார் வினை போக்கும் 
             நீதனே சண்முகா - வேல் முருகா 

வீடும் நாடும் நின் திருத்தாள் 
வேண்டினேன் சண்முகா 
வீரன் சூரன் உடல் கிழித்த 
வேலனே சண்முகா 
ஓடும் மனம் உன்னை நாட 
ஆடிவா சண்முகா 
ஒருவனே என் வினை யழித்த 
                உத்தமா சண்முகா - வேல் முருகா 

எல்லை யில்லா ஆனந் தானே 
ஏகாந்த சண்முகா 
எங்கும் நிறைந்த அந் புருவே 
ஏமுருகா சண்முகா 
தில்லையில் ஆடுந் தேவி 
பாலா சண்முகா 
திருட்டுத் தனமாய்க் குறக் கொடியைக் 
                   கொண்டவா சண்முகா - வேல் முருகா 

தொல்லை யெல்லாம் கடந்த பாதம் 
தந்திடாய் சண்முகா 
தோத்தரித்தோம் எங்கள் முன்னே 
வந்திடாய் சண்முகா 
கல்லை யொத்த மனமுருகக் 
கருணைசெய் சண்முகா 
கல் லெனச் சீலம் பொலிக்க 
ஓடிவா சண்முகா - வேல் முருகா 

முருகன் ரக்ஷைமாலை 

முருகா சரணம் முருகா சரணம் 
முருகா சரணம் முருகா சரணம் 
அன்பர்கள் நேயா அம்பிகை புதல்வா 
துன்பம் அகற்றிடும் சீலா பாலா 
சிவ குமாரா முருகா வருக 
பரம புருஷா வரந்தர வருக 
கலங்கா தெனையே காத்திடு முருகா 
மலந்தா னனுகா வரந்தா முருகா 
காவா முருகா கார்த்திகைக் குமரா 
வாகா முருகா சாகா வரந்தா 

வாவா முருகா வினைதீர்த் திடவே 
யோகா முருகா பகைமாற் றிடவே 
பொன்னடி போற்றிப் பணிந்திடவே 
சென்னியில் உன்னடி ஓங்கிடவே 
தேடிய நலங்கள் செறிந் திடவே 
பாடிய புகழ்கள் மலிந் திடவே 
கூடிய அன்பர் கும்பிடவே 
அன்பால் அவர்தாள் சூடிடவே 
சூடிட வேயான் சூடிடவே 
முருகா சரணம் முருகா சரணம் 
முருகா சரணம் முருகா சரணம் 

வினைகள் தீர்க்கும் வேல்மாறல்!

பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த முறையில் இந்த ‘வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.

வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.

வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம். (வைத்தியர்கள் நோய்க்கு உரிய மருந்தை ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அம்முறையிலே வேல்மாறல் பாராயணத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும்) இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை.

ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும். அதிலும், கார்த்திகேயக் கடவுளாம் முருகனுக்கு உகந்த திருக்கார்த்திகை புண்ணிய மாதத்தில், வேல் மாறல் பாராயணம் செய்வது மிகுந்த விசேஷம்!

பாராயணம் முறை:

வேலுக்கு உகந்த வழிபாடுகளில் ஒன்று வேல்மாறல் பாராயணம்.
அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை: 
1. சீர்பாத வகுப்பு  – மணி வகுப்பு,
2. தேவேந்திர சங்க வகுப்பு -  மந்திர வகுப்பு, 
3. வேல் வகுப்பு -  ஔஷத (மருந்து) வகுப்பு.

வேல் வகுப்பின் பதினாறு அடிகளை மேலும் கீழுமாகவும், முன்னும் பின்னுமாகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து, அதனை நான்கு மடங்காக (16×4 = 64) அறுபத்து நான்கு அடிகளாக அமைய வைத்து, அந்த பாராயண முறையை ‘வேல்மாறல்’ என்று தொகுத்து அளித்தவர் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் ஆவார்.
6வது அடியாகிய ‘திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என (து) உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே’ என்ற வேல் மஹா மந்திர அடி முதலில் 12 முறையும், நிறைவில் 12 முறையும், நடுவில் 64 முறையும் ஆக மொத்தம் 88 முறை ஓதப்பெறுகிறது.

இந்த 16வது அடி எழுவாய் ஆக அமைய, முதல் பதினைந்து அடிகள் யாவும் பயனிலையாக வருமாறு 16ம் அடியை ஒவ்வொரு அடியிலும் சேர்த்துப் படித்தால் அந்த வரி முழுமை பெறுகிறது. இதுதான் இந்த வேல் வகுப்பின் அபூர்வ அமைப்பாகும்.

வேல் மாறல் மஹா  மந்திரம்

விநாயகர் வணக்கம் (கந்தர் அனுபூதி)
நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ் சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கரஆனைபதம் பணிவாம்
முருகன் பெருமை (அலங்கரம்)
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
மயிலின் திரம் (கந்தர் அலங்கரம்)
தடக்கொற்ற வேள்மயி லேஇடர் தீரத் தனிவிடில்நீ
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் தோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே.
தேவேந்திர சங்க வகுப்பு (மந்திரம் போன்றது)
தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு
    சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி.  1
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
    தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை.  2
சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித
    தாமாங்குச மென்றிரு தாளாந்ததர அம்பிகை.  3
தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
    தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி.  4
இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள
    நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள்.  5
இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்
    யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில்.  6
இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல
        ஏகாமபரை யிந்திரை மோகாங்கசு மங்கலை.  7
எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள்
    ஏகாந்தசு லந்தரு பாசாங்குச சுந்தரி.  8
கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை
    காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ்.  9
கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத
    காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்.  10
கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை
    காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு.  11
கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர்
    காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன்.  12
அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்
    வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன்.  13
அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள்
    தார்வேந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன்.  14
அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக
    லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்.  15
அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்
    ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே.  16
வேல் மாறல் மஹா மந்திரம்:
(வேலும் மயிலும் சேவலும் துணை - 6 முறை ஓதவும்)
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.
(இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும்)
  1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும்              ( ... திரு ... )
  2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே              ( ... திரு ... )
  3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்              ( ... திரு ... )
  4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும்              ( ... திரு ... )
  5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்              ( ... திரு ... )
  6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும்              ( ... திரு ... )
  7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும்              ( ... திரு ... )
  8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும்              ( ... திரு ... )
  9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும்              ( ... திரு ... )
10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
         முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்              ( ... திரு ... )
11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும்              ( ... திரு ... )
12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்              ( ... திரு ... )
13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
       ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்              ( ... திரு ... )
14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்              ( ... திரு ... )
15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும்              ( ... திரு ... )
16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும்              ( ... திரு ... )
17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும்              ( ... திரு ... )
18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்

19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்

20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது

21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும்              ( ... திரு ... )
22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை

25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும்              ( ... திரு ... )
26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும்              ( ... திரு ... )
27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள

28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு

29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும்              ( ... திரு ... )
31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும்              ( ... திரு ... )
32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும்              ( ... திரு ... )
34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை

35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை

36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும்              ( ... திரு ... )
37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும்              ( ... திரு ... )
38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும்              ( ... திரு ... )
39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு

40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள

41. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு

42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும்              ( ... திரு ... )
43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு

45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்

46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும்              ( ... திரு ... )
47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது

48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்

49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது

50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்

51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்

52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும்              ( ... திரு ... )
53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு

55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும்              ( ... திரு ... )
57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள

59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும்              ( ... திரு ... )
60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும்              ( ... திரு ... )
61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை

62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும்              ( ... திரு ... )
63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும்              ( ... திரு ... )
64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை

( ...திரு… முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும்... )

தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை.
வேல் விருத்தம் – 3 : வேதாள பூதமொடு
வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும்
வெகுளுறு பசாசகணமும்
வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்கவந்தே
ஆதார கமடமுங் கணபண வியாளமும்
அடக்கிய தடக்கிரியெலாம்
அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை
அருந்திப் புரந்தவைவேல்
தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை
தனிப்பரங் குன்றேரகம்
தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி
தடங்கடல் இலங்கைஅதனிற்
போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப்
புகழும்அவ ரவர்நாவினிற்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன்
புங்கவன் செங்கை வேலே.

*************************************************
வேல் வகுப்பு (விளக்கம்):
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
        விழிக்குநிக ராகும்...... 1

ஆழ்ந்த, அகன்ற, நுண்ணியதாய் இருக்கும் வேல், கூரியதாய் நீண்டு ஒளிரும் வள்ளியம்மையின் கண்ணுக்கு ஒப்பாகும். (வள்ளிப் பிராட்டியாரின் கடைக்கண் நோக்கால் விளையும் பயன்களை வேல் அருளும் என்பது குறிப்பாகும்.)
பனைக்கமுக படக்கரட மதத்தவள
    கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
        தெறிக்கவர மாகும்...... 2

பனை மரம் போல் நீண்ட துதிக்கை, சித்திரங்களோடு விளங்கும் அலங்காரத் துணியை அணிந்துள்ள முகம், கன்னங்களிலிருந்து ஒழுகும் மதநீர்ப் பெருக்கம் ஆகியவற்றோடு, வெண்மை நிறம் வாய்ந்த யானையாகத் திகழும் ஐராவதத்தின் அதிபதியான இந்திரனது கால்களில் பூட்டியிருந்த விலங்கில்… அதனைப் பூட்டுவதற்கு ஆதாரமாக இருந்த ஆணியைத் தெறிக்கச்செய்யும் வேல் ஆற்றல் மிக்க அரமாகும்.

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
    கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
        யிடித்துவழி காணும்...... 3

சிறந்த ஞானத்துடன் பழைமை வாய்ந்த மதுரைத் தமிழ்ச் சங்கப் பலகையில் விளங்கிய ஒப்பற்ற நக்கீரர் இசைத்த திருமுருகாற்றுப்படைக்கு உருகி, அவர் அடைபட்டிருந்த குகையை இடித்துத் தள்ளி அவரை வெளியேற்றும்.

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
    ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
        புசிக்கவருள் நேரும்...... 4

பசியினால் துன்பமுற்றுப் பேய்கள் அங்கங்களை விசைத்தும், விதிர்த்தும், முடக்கியும், உதறியும் புலம்பி உணவு வேண்டி அழுவதைத் தவிர்த்து, அசுரர்களின் வளமிக்க ரத்தத்தையும் சதைகளையும் அவை உண்டு களிக்குமாறு அருளும்.

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
        இடுக்கண்வினை சாடும்...... 5

தேவர்கள், முனிவர்கள், இந்திரன், பிரமன், திருமால், உலக மக்கள் ஆகியவர்களுக்கு நேரிடும் துன்பத்தையும், அதற்கு மூலகாரணமான பூர்வகர்ம வினைகளையும் தாக்கி அழிக்கும்.

சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி
    ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
        ஒளிப்பிரபை வீசும்...... 6

ஒளிவிடும் சூரியன், குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன், கடல் பொங்கிக் கரைகடந்து சென்று உலகத்தை அழிக்காதபடி அதனை அடக்கிக் கொண்டி ருக்கும் வடவாமுகாக்கினி ஆகியவற்றை, ‘வேலின் ஒளிப் பிரபாவத்தின் முன் நம் ஒளி எம்மாத்திரம்’ என்று வெட்கப்பட்டு நாணி ஒளியச் செய்யும் வண்ணம், தனது பேரொளிச் சோதியை எங்கும் பிரகாசிக்கச் செய்யும்.

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
    நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
        எனக்கோர்துணை யாகும்...... 7

தன்னைப் புகழ்ந்து போற்றும் அடியார்களை யாராவது கெடுக்க நினைத்து அவர்களுக்குத் துன்பம் இழைக்க மனதில் நினைத்த மாத்திரத்திலேயே, அந்த பகைவரது குலத்தையே வேருடன் அழித்துவிடும். எனக்கு ஒப்பற்ற பெருந் துணையாகி அருள்பாலிக்கும் (ஆகவே, வேலை வணங்குவதையே வேலையாகக் கொண்டவர்களுக்கு மற்றவர்களால் எந்த விதத்திலும் துன்பம் அணுகாது.)

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
    யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
        மறத்தைநிலை காணும்...... 8

சொற்களால் விவரிக்க முடியாத பெருமையுடைய முருகனது திருவடியைப் புகழ்ந்து போற்றும் திருப்புகழ்ப் பாக்களை ஓதுபவர்களிடம் நிகழ்கின்ற பகையை அழிக்க, கோபித்து ஆக்ரமித்துக் கிளம்பும்.

தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
        கழற்குநிக ராகும்...... 9

அலங்கார ஆரவாரத்துடன் அடியார்களின் உயிரைக் கவர யமன் வந்தால், எருக்கம் பூ மாலையையும் சந்திரனையும் சூடிய முடியுடைய சிவபெருமானின் பேராற்றல் மிக்க திருவடிக்கும் ஒப்பாக நின்று உதவும்.

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
    வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
        விதிர்க்கவளை வாகும்...... 10

உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் பெருமகிழ்ச்சி பெறும் அளவுக்கு உணவளிக்க நேரிடும்போது, மலர்ந்த தாமரை மலருக்கு ஒப்பான முருகன் திருக்கரத்தில் இருந்தபடியே… அவர் அதன் நுனியை லேசாக அசைத்தவுடன், உணவுப் பொருள்களை விளைத்துச் சேகரித்து வளைத்துக்கொண்டு சேர்த்துவிடும். (வேல் பசியைப் போக்கும்; வறுமையின்றி வாழ வைக்கும்; நமது கருத்தறிந்து முடிக்கும்; நாம் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றும்)

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
    வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
        பகற்றுணைய தாகும்...... 11

துணையின்றித் தனியாகச் செல்லும் எனது வலது இடது பக்கங்களிலும், முன் – பின் பக்கங்களிலும் உடன் நின்று இரவு பகல் எப்போதும் துணையாக நின்றருளும்.

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
        விருப்பமொடு சூடும்...... 12

சினந்து வந்த அசுரர்களின் உடம்பில் கொழுத்துத் தடித்திருந்த பெரிய குடல்களைச் சிவந்த பூமாலை போல் தனது முடியில் ஆவலோடு சூடிக்கொள்ளும். (வினைகளையும் அடியோடு அழிப்பது வேல் ஒன்றே)
  
திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
    குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
        நிறைத்துவிளை யாடும்...... 13

அலைகளை வீசுகின்ற கடலில் உடைப்பு உண்டு பண்ணியும், அதில் நிறைந்துள்ள நீரையெல்லாம் ஒரு நொடியில் குடித்தும், அந்த உடைப்பு முழுவதையும் அடைத்து அங்கு அசுரர்களின் ரத்தத்தை நிரப்பியும் விளையாடும்.

திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
        விசைத்ததிர வோடும்...... 14

குலிசாயுதத்துடன் விளங்கும் இந்திரன், முன்னொரு காலத்தில் திசைகளில் உள்ள மலைகளில் இருந்து அறுத்துத் தள்ளிய இறக்கைகள் மீண்டும் அம்மலைகளிடம் முளைத்து விட்டனவோ என்று ஐயுறும்படி, அண்டத்தின் உச்சியிலே அளவிலா வேகத்துடன் எல்லா உலகங்களும் அதிர்ச்சியுற்று நடுங்கும்படி விரைந்து செல்லும். (வேலின் அளவிலா ஆற்றல் அநேக அதிசயம் வாய்ந்தது.)
  
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
        விழித்தலற மோதும்...... 15

சினம் கொண்டு அசுரர்கள் எதிர்த்த போர்க் களத்தில் அளவற்ற அறுப்பட்ட தலைகள் சிரிக்கும்படியாகவும், கண்களை உருட்டி விழித்துப் பார்க்கும்படியாகவும், வாய்கள் அலறும்படியாகவும், அசுரர்களோடு சாடும்.

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
    விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
        நடத்துகுகன் வேலே...... 16

திருத்தணிகையில் உயிர்களின் அக இருள் அகல ஞான சூரியனாகத் தோன்றி அருளும் ஒப்பற்றவனும், குறிஞ்சிக் கிழவனும், உயிருக்குயிராய் எனது உள்ளக் குகையில் உறைபவனும், கருணை உருக்கொண்டு ஆதிக்கு ஆதியாய் நிற்கும் முதல்வனுமான… திரோதான சக்தியாகிய மயிலைச் செலுத்தி நடத்தும் குகப்பெருமானின், ஞானமே உருக்கொண்ட திருவருட் சக்தியாகிய வேலே!

கந்தசஷ்டி கவசம் 

குறள் வெண்பா 
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்.
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம்  பலித்துக்  கதித்து ஓங்கும் 
நிஷ்டையும் கைகூடும்.
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த 
குமரன் அடி நெஞ்சே குறி.

                  நூல் 
சஷ்டியை நோக்க சரவணா பவனார் 
சிஷ்டருக் குதவும்செங்கதிர் வேலோன் 
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை 
கீதம் பாட கிண்கிணி ஆட 
மையல் நடஞ்செய்யும் மயிவாகனனார்.............5

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து 
வர வர வேலாயுதனார் வருக 
வருக வருக மயிலோன் வருக 
இந்திர முதலா எண்திசை போற்ற 
மந்திர வடிவேல் வருக வருக............10

வாசவன் மருகா வருக வருக 
நேசக் குறமகள் நினைவோன் வருக 
ஆறுமுகம் படைத்த ஐயா வருக 
நீறிடும் வேலவன் நித்தம் வருக 
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக.........15

சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண  பவச ரரரர ரரர 
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி 
விணபவ சரஹண வீரா நமோ நம 
நிபவ சரஹண நிறநிற நிறன.........20  

 வசர ஹணப வருக வருக 
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளுக இளையோன் வருக 
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும் 
பரந்த விழிகள் பன்னிரன்டலங்க........25

விரைந்தனைக் காக்க வேலோன்வருக 
ஐயும் கிலியும் அடைவு டன்சௌவும் 
உய்யொளி சௌவும் உயிர் ஐயும் கிலியும்  
கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்
நிலைபெற் றேன் முன் நிதமும் ஒளிரும் ....30

சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்   
குண்டலியாம் சிவ குகன்தினம் வருக   
ஆறுமுகமும் அணிமுடி ஆறும் 
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் 
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்........35

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் 
ஈராறு செவியில் இலகு குண்டலமும் 
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் 
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து 
நன்மணி பூண்ட நவரத்தின மாலையும்......40

முப்புரி நூலும் முத்தணி மார்பும் 
செப்பழகுடைய திருவயிறு உந்தியும் 
துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும் 
நவரத்தினம் பதித்த நற்சீராவும் 
இருதொடை அழகும் இணை முழந்தாளும்.....45

திருவடி யதனில்  சிலம்பொலி முழங்க 
செககண செககண செகக செககண 
மொகமொக மொகமொக மொகமொக மொகென   
நகநக நகநக நகநக நகென 
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுகண.....50

ரரரர ரரரர ரரரர ரரர 
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி 
டுடுடுடு  டுடுடுடு  டுடுடுடு  டுடுடு       
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு 
விந்து வித்து மயிலோன் விந்து.......55

முந்து முந்து முருகவேள் முந்து   
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் 
லாலா லாலா லாலா வேசமும் 
லீலா லீலா லீலா வினோதனென்று .....60

உன்திரு வடியை உருதி என்றெண்ணும் 
என்தலை வைத்துன் இணையடி காக்க 
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க 
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க....65

பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க 
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க 
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க 
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க 
பேசிய வாய்தனைப பெருகவேல் காக்க.....70

முப்பத திருப்பல் முனைவேல் காக்க 
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க 
கன்னமிரண்டும்  கதிர்வேல் காக்க 
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க 
மார்பை இரத்தின வடிவேல் காக்க.....75

சேரிள முலைமார் திருவேல் காக்க 
வடிவே ளிருதோள் வளம்பெறக் காக்க 
பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க 
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க 
பழுபதினாறும் பருவேல் காக்க.....80

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க 
சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க 
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க 
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க 
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க.....85

வட்ட குதத்தை வல்வேல் காக்க 
பணைத்தொடையிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க 
ஐவிரல் அடியினண அருள்வேல் காக்க 
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க....90

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க 
பின்கையிரண்டும் பின்னவள் காக்க 
நாவில்  ஸரஸ்வதி நற்றுணை ஆக  
நாபிக் கமலம் நல்வேல் காக்க 
முப்பால் நாடியை முனை வேல் காக்க....95

எப்பொழுதும்  எனை எதில்வேல் காக்க 
அடியேன் வசனம் அசைவுள நேரம் 
கடுகவே வந்து கனக வேல் காக்க  
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க 
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க...100

ஏமத்தில் ஜாமத்தில் எதிர்வேல் காக்க 
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க 
காக்க காக்க கனகவேல் காக்க 
நோக்க நோக்க நொடியில் நோக்க 
தக்கத் தக்கத் தடையறத் தாக்க....105

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட 
பில்லி சூனியம் பெரும்பகை அகல 
வல்ல பு தம் வலாஷ்டிகப் பேய்களும் 
அல்லற் படுத்தும் அடங்கா முனியும் 
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்...110

கொள்ளிவாய்ப்பேய்களும் குரலைப் பேய்களும் 
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்  
அடியனைக்கண்டால் அலறிக்கலங்கிட  
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும் 
எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்...115

கன புசைகொள்ளும் காளியோடனே வரும் 
விட்டங் காரரும் மிகுபல பேய்களும் 
தண்டியக்காரரும் சண்டாளர்களும் 
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட 
ஆனை அடியினில் அரும்பாவைகளும்...120

பு னை மயிரும் பிள்ளைகள் என்பும் 
நகமும் மயிறும் நீண்டமுடி மண்டையும் 
பாவைகளுடனும் பலகலசத்துடன் 
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் 
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்....125

காசும் பணமும் காவுடன் சோறும் 
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் 
அடியனைக் கண்டால் அலைந்த குலைத்திட 
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட 
கால தூதாள் எனைக் கண்டாற் கலங்கிட....130

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட 
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக் கையிற்றால் 
கட்டுடன் அங்கம் கதறிட க்கட்டு  
கட்டி உருட்டு கால்கை முறிய...135

கட்டு கட்டு கதறிடக் கட்டு 
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட 
செக்கு செக்கு செதில் செதிலாக 
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு 
குத்து குத்து கூர்வடிவேலால்....140

பற்று பற்று பகலவன் தணலெரி 
தணலெரி தணலெரி தணலது  வாக 
விடு விடு வேலை வெருண்டது வோட 
புலியும் நரியும் புன்னரி நாயும் 
எலியும் கரடியும் இனிதொடர்ந் தோட....145

தேளும் பாம்பும்  செய்யான் புரான்  
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் 
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க 
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் 
வாதம் சயித்தியம் வலிப்புப  பித்தம்...150

சூலைசயங்  குன்மம் சொக்குச்சிரங்கு 
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி 
பக்கப்  பிளவை படர் தொடை வாழை 
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி 
பற்குத்து அரணை பருஅ ரை யாப்பும்....155 

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் 
நில்லாதோட நீ எனக் கருள்வாய் 
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக 
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா 
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்...160 

உன்னைத் துதிக்க உன் திருநாமம் 
சரஹண பவணே சையொளி பவனெ
திரிபுர பவனெ திகழொளி பவனெ  
பரிபுர பவனெ  பவம் ஒளி பவனெ
அரிதிரு மருகா அமரா பதியைக் ...165

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விதித்தாய் 
கந்தா குகனே கதிர்வேலவனே 
கார்த்திகை மைந்தா  கடம்பா கடம்பனே 
இடும்பனை ஏன்ற இனியவேல் முருகா 
தணிகா சலனே சங்கரன் புதல்வா....170

கதிகா மத்துறை கதிர்வேல் முருகா 
பழனிப் பதிவாழ் பாலகுமாரா 
ஆவினன்குடி வாழ் அழகிய வேலா 
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா 
சமரா புரிவாழ் சண்முகத் தரசே...175

காரார் குழலாள் கலைமகள் நன்றாய் 
என்நா இருக்க யான் உனைப் பாட 
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனை 
பாடினே ஆடினேன் பரவசமாக 
ஆடினேன் நாடனேன் ஆவினன் பூதியை....180

நேச முடன்யான் நெற்றியில் அணியப் 
பாச வினைகள் பற்றது நீங்கி 
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புட ன் இரஷி அன்னமுஞ் சொன்னமும் 
மெத்த மெத்த தாக வேலா யுதனார்...185

சித்திப்பெற் றடியேன் சிறப்புடன் வாழ்க 
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க 
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க 
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க 
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்...190

வாழ்க வாழ்க வாரணத்துவசம்  
வாழ்க வாழ்க வறுமைகள் நீங்க 
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் 
எத்தனை யடியேன் எத்தனை செய்தால் 
பெற்றவன் நீ குறு பொறுப்பது உன் கடன் ...195

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே 
பிள்ளையென் றன்பாய் பிரியமளித்து
 மைந்தனென் மீது மனமகிழ்ந்தளிலித் 
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் 
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய....200

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் 
காலையில் மாலையில் கருத்துடன் நாளும் 
ஆசாரத்துடன் அங்கந் துலக்கி 
நேச முடன் ஓருநினைவது வாகி 
கந்தர் சஷ்டக்  கவசம் இதனைச்....205

சிந்தை கலங்காது தியானிப்பவவர்கள் 
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு 
ஓதியே செபித்து உகந்து நீறணிய 
அஷ்டதி க்குள்ளோர் அடங்கலும் வசமாய்த் 
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்...210

மாற்றல ரெல்லாம்  வந்து வணங்குவர் 
நவகோள்  மகிழ்ந்து நன்மை யளித்திடும் 
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் 
எந்தநாளுமீ  ரெட்டா வாழ்வார் 
கந்தர்கை வேலாம் கவசத்தடியை...215

வழியாற் கான மெய்யாம் விளங்கும் 
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் 
பொல்லாதவரை பொடிபொடி யாக்கும்  
நல்லோர் நினைவில் நடனம் புரியும் 
சர்வ சத்துரு சங்கா ரத்தடி...220

அறிந்தென் துள்ளம் அஷ்டலட் சிமிகளில் 
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் 
சூரபத்மாவைத் துணித்தகை யதனால் .
இருபபத் தேர்வர்க்கு உவந்தமு தளித்த 
குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்...225

சின்னக் குழந்தை சேவடி போற்றும் 
என்னை தடுத தாட்க்கொள்ள என்றன துள்ளம் 
மேவிய வடிவுறும் வேலவ போற்றி 
தேவர்கள் சேனாபதியே போற்றி 
குறமகள் மனமகிழ் கோவே போற்றி....230

திறமிகு திவ்விய தேகா போற்றி 
இடும்பா யுதனே இடும்பா போற்றி 
கடம்பா போற்றி கந்தா போற்றி 
வெட்சி புனையும் வேளே போற்றி 
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே....235

மயில்நடமிடுவாய் மலர் அடி சரணம் 
சரணம் சரணம் சரஹண பவ ஓம் 
சரணம் சரணம் சண்முகா சரணம்...238

கன்னிப் பெண்களின் திருமணம் கைகூட 

நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே 
நீவந்த வாழ்வைக்கண்(டு) அதனாலே 
மால்கொண்ட பேதைக்குள் மணநாளும் 
மார்தங்கு தாரைத்தந்(து ) அருள்வாயே 
வேல்கொண்டு வேலைப்பண்(டு) எறிவோனே 
வீரங்கொள் சூரர்க்கும் குலகாலா 
நாலந்த வேதத்தின் பொருளோனே 
நான்என்று மார்தட்டும் பெருமாளே .

 நன்றி :
தினமலர் 
ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் 
ஸ்ரீ பால தேவராய ஸ்வாமிகள் 
ஸ்ரீ ராஜகோபால கனபாடிகள் 
சிவஸ்ரீ சோமசுந்தர ரவி குருக்கள்
திரு.மார்க்கண்டு தேவராஜா

சுபம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக